NIFTY IT 30,272.95 330.90% SENSEX 80,238.85 1,048.34% BANKNIFTY 59,839.65 689.35% NIFTY 50 24,865.70 312.95% Silver 30,000.00 +5.00% Gold 156,000.00 +10.00%

View Market Stock Values

ஐயப்பன் 108 சரணங்கள் தமிழில் | சுவாமியே சரணம் ஐயப்பா

ஐயப்பன் 108 சரணங்கள் தமிழில் – சுவாமி ஐயப்பன் திருவுருவம்
Facebook
Twitter
LinkedIn

சுவாமி ஐயப்பனைப் போற்றி வழிபடுவதில் சரண கோஷங்களுக்கு முக்கிய இடம் உண்டு. “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி முழக்கத்துடன் ஐயப்ப பக்தர்கள் இறைவனைச் சரணடைந்து வழிபடுகின்றனர். குறிப்பாக சபரிமலை யாத்திரை மற்றும் மண்டல கால வழிபாட்டின்போது ஐயப்பன் சரண கோஷங்கள் பக்தி உணர்வை வெளிப்படுத்துகின்றன.

இந்தப் பக்கத்தில் ஐயப்பன் 108 சரணங்கள் தமிழில், சரண கோஷங்களின் சிறப்பு, வழிபாட்டு முறை மற்றும் ஐயப்பன் விரதம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

ஐயப்ப பக்தர்கள் தங்கள் குடும்ப வழக்கம் மற்றும் குருசாமியின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்தச் சரணங்களைப் பாராயணம் செய்யலாம். சபரிமலை யாத்திரை மேற்கொள்பவர்களுக்கும் ஐயப்ப வழிபாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்தத் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா

ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா

ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா

ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா

ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இன்தமிழ்ச்சுவையே சரணம் ஐயப்பா

ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா

ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா

ஓம் உண்மைப்பரம் பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா

ஓம் ஏகாந்த முர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் கலியுகவரதனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா

ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

ஓம் குளத்துப்புழைப் பாலனே சரணம் ஐயப்பா

ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா

ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பையிலே பிறந்தவனே சரணம் ஐயப்பா

ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம்நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே சரணம் ஐயப்பா

ஓம் குருதட்சணை அளித்தவனே சரணம் ஐயப்பா

ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம்ஐயப்பா

ஓம் வன்புலியின் வாகனனே சரணம்ஐயப்பா

ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே சரணம்ஐயப்பா

ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா

ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம்ஐயப்பா

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம்ஐயப்பா

ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம்ஐயப்பா

ஓம் காளைகட்டி நிலையமே சரணம்ஐயப்பா

ஓம் அதிர்வேட்டுப்பிரியனே சரணம்ஐயப்பா

ஓம் அழுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் ஆனந்தமிகு பஜனைப்பிரியனே சரணம்ஐயப்பா

ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம்ஐயப்பா

ஓம் இஞ்சிப்பாறைக்கோட்டையே சரணம்ஐயப்பா

ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா

ஓம் ஸ்ரீராமர் பாதமே சரணம் ஐயப்பா

ஓம் சக்திபூஜைக் கொண்டவனே சரணம் ஐயப்பா

ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா

ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா

ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

ஓம் அப்பாச்சிமேடே சரணம் ஐயப்பா

ஓம் இப்பாச்சிக்குழியே சரணம் ஐயப்பா

ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

ஓம் கடுத்தசாமியே சரணம் ஐயப்பா

ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா

ஓம் கற்பூரப்பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் நாகராஜாப் பிரபுவே சரணம் ஐயப்பா

ஓம் மாளிகைப் புறத்தம்மனே சரணம் ஐயப்பா

ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா

ஓம் அலங்காரப்பிரியனே சரணம் ஐயப்பா

ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

ஓம் சற்குருநாதனே சரணம் ஐயப்பா

ஓம் மகரஜோதியே சரணம் ஐயப்பா

ஓம் மங்களமூர்த்தியே சரணம் ஐயப்பா

Frequently Asked Questions

ஐயப்பன் 108 சரணங்கள் என்றால் என்ன?

ஐயப்பன் 108 சரணங்கள் என்பது சுவாமி ஐயப்பனைப் போற்றி சரணடையும் பக்தி முழக்கங்களின் தொகுப்பைக் குறிக்கிறது. பக்தர்கள் இவற்றை வழிபாடு, பஜனை மற்றும் சபரிமலை யாத்திரை தொடர்பான ஆன்மீக நிகழ்வுகளில் பாராயணம் செய்கின்றனர்.

ஐயப்பன் 108 சரணங்களை எப்போது சொல்லலாம்?

ஐயப்பன் 108 சரணங்களை தினசரி வழிபாட்டின்போது, காலை அல்லது மாலை நேரத்தில், ஐயப்பன் பஜனையின்போது அல்லது மண்டல விரதக் காலத்தில் உங்கள் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப சொல்லலாம்.

ஐயப்பன் சரண கோஷத்தின் முக்கியத்துவம் என்ன?

“சுவாமியே சரணம் ஐயப்பா” என்பது சுவாமி ஐயப்பனிடம் பக்தியுடன் சரணடைவதை வெளிப்படுத்தும் புகழ்பெற்ற சரண கோஷமாகும். பக்தர்கள் இதனை இறைநம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் ஆன்மீக ஈடுபாட்டின் வெளிப்பாடாகக் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *